ஜி.டி. நாயுடு அவர்களால் 1950-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இங்கு 19-ஆம் நூற்றாண்டு முதல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் காட்டும் அரிய கார்கள், தொலைபேசிகள், கேமராக்கள் மற்றும் அவரது சொந்தக் கண்டுபிடிப்புகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இங்கு உள்நாடு மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் கூட தினமும் ஏராளமானவர்கள் வந்து அருங்காட்சியகத்தை பார்வையிட்டு செல்கின்றனர்.
தொழில்துறை மற்றும் அறிவியல் காட்சியகம்: திரு. ஜி.டி. நாயுடுவின் ஐரோப்பியப் பயணங்களின் போது சேகரிக்கப்பட்ட பல்வேறு அரிய உபகரணங்கள், பழைய காலத்து கேமராக்கள், தட்டச்சு பொறிகள், கால்குலேட்டர்கள் மற்றும் ரேடியோக்கள் உள்ளன
பரிசோதனை அறிவியல் மையம் (Experimenta): 'செய்து கற்றல்' (Learning by doing) என்ற கொள்கையின் அடிப்படையில், மாணவர்களுக்கும் குழந்தைகளுக்கும் அறிவியல் தத்துவங்களை எளிமையாகப் புரிந்துகொள்ள உதவும் அறிவியல் ஆய்வகம்.
அருங்காட்சியகத்தை முழுமையாகச் சுற்றிப் பார்க்க சுமார் 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை தேவைப்படும்.
செயல்படும் நேரம்: காலை 9:00 மணி முதல் மாலை 6:30 மணி வரை. அதேபோல், வாரந்தோறும் திங்கட்கிழமை மற்றும் தேசிய விடுமுறை நாட்களில் அருங்காட்சியகம் மூடப்பட்டிருக்கும்.
மேலும் விவரங்களுக்கு GD அருங்காட்சியகத்தின்அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடலாம்.