🏆 தினத்தந்தியின் மாபெரும் வாசகர் பரிசுப் போட்டி

தமிழக மக்களின் நாடித்துடிப்பான தினத்தந்தி நாளிதழ், ‘வணக்கம் சென்னை’ என்ற பெயரில் சிறப்பு மலர் ஒன்றை 15-11-2025 (சனிக்கிழமை) அன்று வெளியிடுகிறது.

இதையொட்டி, வாசகர்களுக்கு அந்தக்கால சென்னை குறித்த படைப்புத்திறன் மற்றும் அறிவுத்திறன் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் வெற்றி பெறுபவர்களுக்கு 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பரிசுகள் அளிக்கப்படும்.

போட்டி விவரம்

  1. படைப்புத்திறன் போட்டி

வாசகர்கள் அந்தக்கால சென்னை தொடர்பாக தங்கள் அனுபவங்கள், அபூர்வ தகவல்கள் போன்றவற்றை கட்டுரைகளாக எழுதி அனுப்பலாம். மேலும் உங்களிடம் சென்னை தொடர்பான பழமையான, வித்தியாசமான புகைப்படங்கள் இருந்தால் அவற்றையும் அனுப்பலாம். இவை தவிர அந்தக்கால சென்னை குறித்து உங்கள் கற்பனையில் 15 வரிகளுக்குள் கவிதைகளும் எழுதி அனுப்பலாம். ஓவியங்கள் வரைந்தும் அனுப்பலாம்.

உங்கள் படைப்புகளை 5-11-2025 (புதன்கிழமை) க்குள் எங்களுக்கு வந்து சேரும்படி அனுப்ப வேண்டும். சிறந்த படைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்படும். மேலும், தேர்ந்தெடுக்கப்படும் படைப்புகள் 15-11-2025 (சனிக்கிழமை) அன்று வெளிவரும் ’வணக்கம் சென்னை’ சிறப்பு மலரில் பிரசுரிக்கப்படும்.

  1. அறிவுத்திறன் போட்டி

வாசகர்களுக்கான அறிவுத்திறன் போட்டியில் அந்தக்கால சென்னை தொடர்பான கேள்விகள் கேட்கப்படும். 1-11-2025 முதல் 10-11-2025 வரை 10 நாட்கள் தினமும் 5 கேள்விகள் வீதம் மொத்தம் 50 கேள்விகள் கேட்கப்படும்.

அனைத்து கேள்விகளுக்கும் சரியான விடை எழுதியவர்களில் அதிர்ஷ்டசாலிகள் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பரிசுகள்  அளிக்கப்படும்.

🎁 பரிசுகள்

படைப்புத்திறன் மற்றும் அறிவுத்திறன் போட்டிகளில் வெற்றி பெறும் வாசகர்கள் மற்றும் மாணவர்களுக்கு ரூ. 5 லட்சத்துக்கும் அதிகமான கீழ்க்கண்ட பரிசுகள் வழங்கப்படும்.

  • லெனோவா லேப்டாப் -5
  • சாம்சங் ஸ்மார்ட் டி.வி.-2
  • ஆப்பிள் ஐ போன் 16 (128 ஜி.பி.) -1
  • சாம்சங் கேலக்சி ஏ-36-5ஜி (8 ஜி.பி.) மொபைல் போன் – 1
  • ஸ்மார்ட் வாட்சுகள்-60

மேலும், படைப்புத்திறன் மற்றும் அறிவுத்திறன் போட்டியில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சத்யா ஏஜென்சிஸ் வழங்கும் ஆயிரம் ரூபாய்க்கான பரிசுகூப்பன் அளிக்கப்படும். இந்த நிறுவனத்தில் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பொருட்கள் வாங்கும் போது இந்த கூப்பனை பயன்படுத்தி ஆயிரம் ரூபாய் தள்ளுபடி பெறலாம்.

விதிமுறைகள்

* படைப்புகள், விடைகளை தபால், மின்னஞ்சல், வாட்ஸ் அப் மூலமும் இங்கே உள்ள கி.யூ. ஆர் கோடை ஸ்கேன் செய்து அதன் மூலமும் அனுப்பலாம்.

* உங்கள் பெயர், முகவரி, தொலைபேசி எண் போன்றவற்றை மறக்காமல் குறிப்பிடவும். முகவரி, தொலைபேசி எண்கள் இல்லாத படைப்புகள், விடைகள் பரிசீலனைக்கு ஏற்கப்படாது.

* கேள்விகளுக்கு பதில் அளிப்பவர்களில் வாசகர்கள், மாணவர்கள் என இரு பிரிவாக வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் அளிக்கப்படும். எனவே, விடைகள் அனுப்பும் போது, மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளி, வகுப்பு விவரத்தைக் குறிப்பிட வேண்டும்.

* பலர் சரியான விடை எழுதி இருந்தால் குலுக்கல் முறையில் அதிர்ஷ்டசாலிகள் தேர்ந்து எடுக்கப்படுவார்கள்.

* இந்த போட்டி தொடர்பான அனைத்து முடிவுகளும் தினத்தந்தி நிர்வாகத்தின் தீர்ப்புக்கு உட்பட்டது.

உங்கள் படைப்புகளை அனுப்புங்கள்

📬 உங்கள் படைப்புகளை அனுப்பும் வழிகள்

படைப்புகளை தபால், மின்னஞ்சல் அல்லது வாட்ஸ் அப் மூலமாக அனுப்பலாம். உங்கள் படைப்புகளை அனுப்புவதற்கான அனைத்து வழிகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
📮
தபால் முகவரி
வணக்கம் சென்னை,
தினத்தந்தி,
86, ஈ.வி.கே. சம்பத் ரோடு,
வேப்பேரி, சென்னை – 600 007.
📧
மின்னஞ்சல்
events@dt.co.in

இந்த மின்னஞ்சலில் பதில்களை அனுப்பவும்.

💬
வாட்ஸ் அப் எண்
+91 9962098888

பதில்களை நேரடியாக வாட்ஸ்அப்பில் அனுப்புங்கள்.